×

கேரளாவை தவறான விதத்தில் சித்தரித்து, மத மோதலை ஊக்குவிக்கும் கேரளா ஸ்டோரி படத்தை ஒளிபரப்ப எதிர்ப்பு..!

கேரளா: கேரளாவை தவறான விதத்தில் சித்தரித்து, மத மோதலை ஊக்குவிக்கும் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்ப கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த அண்டு மே மாதம் விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம், ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாகச் சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளதால் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

ஆயினும் நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. இந்நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கேரளா ஸ்டோரி படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சி இன்று இரவு ஒளிபரப்ப உள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதமோதலை ஏற்படுத்தும் கேரளா ஸ்டோரி படத்தை தேர்தல் நேரத்தில் அரசு தொலைக்காட்சி தூர்தர்ஷனில் வெளியிட கேரள அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், கேரளா ஸ்டோரி படத்தை தூர்தர்ஷன் இன்று ஒளிபரப்புவதற்கு எதிராக இந்தியா கூட்டணி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளது.

The post கேரளாவை தவறான விதத்தில் சித்தரித்து, மத மோதலை ஊக்குவிக்கும் கேரளா ஸ்டோரி படத்தை ஒளிபரப்ப எதிர்ப்பு..! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kerala government ,Sudipto Chen ,Adha Sharma ,Siddhi Idnani ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...