×

டி.டி.யில் கேரளாவை தவறான விதத்தில் சித்தரித்த கேரளா ஸ்டோரி படத்தை ஒளிபரப்ப எதிர்ப்பு..!!

கேரளா: கேரளாவை தவறான விதத்தில் சித்தரித்து, மத மோதலை ஊக்குவிக்கும் திரைப்படத்தை ஒளிபரப்ப கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கேரளா ஸ்டோரி படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சி இன்று இரவு ஒளிபரப்ப உள்ளது. கேரளாவில் இளம்பெண்களை மதமாற்றம் செய்து தீவிராவத செயலுக்கு பயன்படுகிறார்கள் என்பதே படத்தின் மையக்கருத்து. படம் வெளியானபோதே கேரளா ஸ்டோரிக்கு தடை விதிக்க அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. மதமோதலை ஏற்படுத்தும் கேரளா ஸ்டோரி படத்தை தேர்தல் நேரத்தில் அரசு தொலைக்காட்சி தூர்தர்ஷனில் வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டி.டி.யில் கேரளாவை தவறான விதத்தில் சித்தரித்த கேரளா ஸ்டோரி படத்தை ஒளிபரப்ப எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : D. ,Kerala ,Kerala government ,Doordarshan TV ,
× RELATED முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும்,...