- மேலாண்மை
- இனாம்குளத்தூர்
- Thiruverumpur
- மணிகண்டம் வட்டரம் வேளாண்மை உழவர் நலத்துறை
- திருச்சி
- மணிகண்டம் வட்டார விவசாயம்
- நெல்
திருவெறும்பூர், ஏப்.5: திருச்சி அருகே உள்ள மணிகண்டம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் கீழ் இனாம்குளத்தூர் கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய பண்ணைப்பள்ளி நடத்தப்பட்டது. திருச்சி அருகே மணிகண்டம் வட்டார வேளாண் விரிவாக்கம் மையம் சார்பில் இனாம்குளத்தூரில் நடந்த நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் பசரியா பேகம் தலைமை வைத்து மானியதிட்டங்கள்.
உழவன் செயலியின் பயன்பாடுகளின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். வேளாண்மை துணை இயக்குநர் ஆனந்த செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உழவியல் முறை, பயிர் பாதுகாப்பு மற்றும் வரப்பு பயிர் போடுவதன் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். வேளாண்மை அலுவலர்(உப.நி) புவனேஸ்வரி அட்மா திட்டங்கள் மற்றும் விதைநேர்த்தி செய்வதன் நன்மைகள், மீன் அமிலம், இயற்கை இடுப்பொருட்களின் முக்கியதுவம் பற்றி விவசாயிகளுக்கு தெரிவித்தார்.
வேளாண் வணிகம் மற்றும் விற்பனை உதவி அலுவலர் ஹரிவிஷ்ணுகுமார் வேளாண் பொருட்கள் சந்தை படுத்தும் முறைகள் மற்றும் உழவர் சந்தை பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். இதில் ரோவர் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் வாழையில் நார் பிரித்தெடுத்தல், பருத்தியில் விதைநேர்த்தி மற்றும் கோனோ வீடர் பற்றி விவசாயிகளுக்கு தெரிவித்தார்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர். வேளாண்மை உதவி அலுவலர் பாலாஜி நன்றி கூறினார்.
The post இனாம்குளத்தூரில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை appeared first on Dinakaran.