- திருவாரூர் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள்
- மன்னார்குடி
- திமுக
- தேமுதிக
- பாஜக
- நாடா
- தஞ்சாவூர்
- தஞ்சை
- திருவையாறு
- ஒரத்தநாடு
- பட்டுக்கோட்டை
- பேராவூரணி
- தின மலர்
மன்னார்குடி, ஏப். 5: தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார் குடி என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, தேமுதிக, பாஜ, நாதக மற்றும் சுயேச்சைகள் என மொ த்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரசாரம் நாளுக்குநாள் சூடுபிடித்து வரும் நிலையில், தேர்தலுக்கான முன் னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் சிலிப் புகள் வழங்கும் பணிகள் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் களின் முகவர்களுக்கான ஆலோசனை கூட் டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்டிஓ நேர் முக உதவியாளர் ஸ்ரீ ராம், வாக்காளர் பதிவு அலுவலர் தாசில்தார் மகேஷ் குமார், தேர்தல் துணை தாசில்தார் ராஜேஸ்கண்ணா ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 12 வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்திற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீர்த்தனாமணி தலைமை வகித்து பேசுகையில், வாக்குச் சாவடி மைங்களுக்கு நேரில் வந்து வாக்களி க்க முடியாத சூழலில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட விருப்பம் தெரிவித்து ள்ள வாக்காளர்கள் மற்றும் விருப்பம் தெரிவித்துள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீடு களுக்கு நேரில் சென்று அவர்களின் வாக்குகளை பதிவு செய்வதில் உள்ள நடைமுறைகள் குறித்து வேட்பாளர் களின் முகவர்களிடம் விளக்கமாக எடுத்து கூறினார். மேலும், இப்பணிகள் 5,6,8 ஆகிய மூன்று நாட் கள் நடை பெறும் எனவும் இதில் 9 குழுவினர் பணியாற்றுவார்கள் என கூறினார்.
The post திருவாரூர் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.