×

பாபநாசம் வட்டம் காவிரி-அரசலாறு தலைப்பை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

 

கும்பகோணம், ஏப்.5: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், காவிரி-அரசலாறு (சிஏடேம்) தலைப்பை தஞ்சாவூர், கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் ஆய்வு செய்தார். இந்த அணை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இந்த பணியின் மதிப்பீடு ரூ.40.00 கோடி ஆகும்.

மேலும் இந்த பணியினால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 2,40,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் காரைக்கால் மாநிலமும் பாசன வசதி பெறுகிறது. இந்த அணை கடந்த ஆண்டு பாசன உபயோகத்திற்கு வந்தது. அதேபோல் கீர்த்தி மன்னார் மற்றும் நாட்டார் ஆற்றில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் நடைபெறும் தடுப்பணை, மதகுகள், தளமட்டச்சுவர், தார்சாலை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் ஆய்வு செய்தார்.

இதன் மொத்த மதிப்பீடு ரூ.218.54 கோடி ஆகும். ஆய்வின் போது செயற்பொறியாளர் இளங்கோ, உதவிசெயற்பொறியாளர் முத்துமணி, உதவி பொறியாளர்கள் வெங்கடேசன் மற்றும் ராதா ஆகியோர் உடனிருந்தனர்.

The post பாபநாசம் வட்டம் காவிரி-அரசலாறு தலைப்பை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Babanasam Circle ,Cauvery ,Arasalaru ,Kumbakonam ,Thanjavur ,Lower ,Shanmugam ,CAdam ,Papanasam Circle ,Thanjavur District ,Papanasam ,Arasalar ,Dinakaran ,
× RELATED வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி...