பெரம்பலூர், ஏப்.5: பெரம்பலூரில் கோடை விடுமுறையை கொண்டாட கலெக்டர் அலுவலக சிறுவர் அறிவியல் பூங்கா சீரமைக்கப்பட்டு தயாராகி வருகிறது. இதனால் அரசு ஊழியர் குடும்பத்தார், நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாகம் அமைக்கும்போதே, வளாகத்தின் முன்பு, சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. ஊஞ்சல்கள், சறுக்கு தளம், சீஸா உள்ளிட்ட உபகரணங்களுடன் சாதாரணமான சிறுவர் பூங்காவாக இருந்த இந்தப் பகுதி கலெக்டர் நந்தக்குமார் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த போது அறிவியல் உப கரணங்கள் சேர்க்கப்பட்டு சிறுவர் அறிவியல் பூங்காவாக தரம் உயர்த்தப் பட்டது.
இதனால் வார நாட்களில் குறிப்பிடத்தக்க நகர வாசிகளும் அரசு அலுவலர் குடும்பத்தினரும் வந்துபோகும், இந்த சிறுவர் அறிவியல் பூங்கா சனி ஞாயிறு விடுமுறை தினங்களிலும் அரசு விடுமுறை நாட்களிலும் திருவிழாபோல் ஆர்ப்பரிக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் அடங்கிய மக்கள் கூட்டத் தால் நிரம்பி வழியும். பெரம்பலூர் நகராட்சி மக்களின் ஒரே பிரதான பொழுதுபோக்குக் கேந்திர மாக விளங்கிவரும் கலெக் டர் அலுவலக சிறுவர் அறிவியல் பூங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த சிறுவர் அறிவியல் பூங்கா கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கத்தால் உதிர்ந்து கொட்டிய இலைகள், சருகுளுடன், வந்து சொல்லும் பொதுமக்கள் போட்டுச் சென்ற குப்பைகளுடன் காணப்பட்ட நிலையில், தற்போது சிறுவர் அறிவி யல் பூங்காவில் உள்ள அனைத்து உபகரணங்க ளும் வண்ணம் தீட்டப்பட்டு பழுதுகள் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் விளையாட ஏதுவாக 10 லோடுகளுக்கும் மேலாக மணல்கொட்டி நிரவுகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கோடை வெப்பத்தை சமாளிக்க ஏதுவாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளம் வருகிற 9ம் தேதி முதல் பயிற்சிக்கு ஏற்றபடி தயார் செய்யப் பட்டுள்ளது போல தற்போது கோடை விடுமுறை யைக் குதூகலமாக நகர வாசிகள் கொண்டாட ஏதுவாக கலெக்டர் அலுவலக சிறுவர் அறிவியல் பூங்கா தயார்படுத்தப்பட்டு வரும் பணிகள், நகரவாசிகளை, அரசு அலுவலர் குடும்பத் தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கோடைவிடுமுறையை கொண்டாட கலெக்டர் அலுவல வளாக சிறுவர் பூங்காவில் சீரமைப்பு பணி appeared first on Dinakaran.