×

கரூரில் பலாப்பழம் விற்பனை அமோகம்

 

கரூர், ஏப். 5: தமிழகத்தில் முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவது பலாப்பழம் ஆகும். தமிழகத்தில் பண்ருட்டி புதுக்கோட்டை மாவட்ட பலாப்பழங்களு தனி ருசி உண்டு. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கைகாட்டி, ஆலங்குடி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் அதிக அளவில் பலா உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்ற ஆண்டும் நடப்பாண்டும் பருவமழை அதிக அளவில் பெய்து வருவதால் மாவட்டத்தில் பலாப்பழத்தின் விளைச்சல் இதுவரை இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட சுமார் 60% விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் புதுக்கோட்டையில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் நான்கு சக்கர வாகனங்களில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, துத்தநாகம் , மெக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்து, காப்பர்
ஆகிய சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. மேலும் இச்சத்தானது ஆண்களின் உடல் வளர்ச்சிக்கும் உடல் வலுவிற்கும் முக்கிய உணவு வாக் உள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் கரூர், பசுபதிபாளையம், காந்திகிராமம், ராயனூர் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் பலாப்பழத்தை விற்பனை செய்து வருகின்றனர். மக்களும் பலாப்பழத்தை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

The post கரூரில் பலாப்பழம் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu ,Panruti ,Pudukkottai District ,Kaigatti ,Alangudi ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...