தர்மபுரி, ஏப்.5: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை காளியம்மன் கோயில் விழா, கடந்த மார்ச் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். கோயிலை சுற்றிலும், பழக்கடை, ஜூஸ் கடைகள், மிட்டாய் கடைகள் என, பல்வேறு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், பாரம்பரிய மிக்க கருப்பு கூழ் பானை விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதுகுறித்து பானை தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘கோயில் திருவிழாக்களின் போது மட்டும் கருப்பு கூழ் பானை விற்பனை செய்யப்படும். கூழ்பானை வேறு எங்கும் விற்பனை செய்யப்படாது. இதில் கூழ் வைத்தால் கெடாமல் இருக்கும். மண், வைக்கோல், வரகு அரிசி, உமி ஆகியவை மூலம் தயாரிக்கப்படும் விசேஷ கூழ் பானை, ₹70 மற்றும் ₹100 என இரு ரகங்களில் விற்பனை செய்கிறோம். வேறு இடங்களில் கிடைக்காது என்பதால், இந்த திருவிழாவில் கூழ் பானை விற்பனை அதிகமாக இருக்கும்,’ என்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post அதியமான்கோட்டையில் கூழ்பானை விற்பனை ஜோர் appeared first on Dinakaran.