×

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் தீர்த்தவாரி பக்தர்கள் திரளாக பங்கேற்பு

களக்காடு,ஏப்.5: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். களக்காடு அருகே திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினசரி நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். 10ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக 11ம் திருநாளான நேற்று (4ம் தேதி) காலை நம்பியாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து அழகியநம்பிராயர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இரவில் வைஷ்ணவர்களுக்கு விடை சாதித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

The post திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் தீர்த்தவாரி பக்தர்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tirukurungudi Ajaya Nambirayar Temple ,Kalakadu ,Theerthawari ,Nambirayar temple ,Tirukkurugundi ,Panguni Brahmotsava festival ,Thirukkurungudi Ajaya Nambirayar Temple ,Kalakkadu ,Theerthavari ,
× RELATED மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம் ஐகோர்ட் கிளையில் மேலும் ஒரு வழக்கு