×

‘கிராம வருவாய்த்துறை அதிகாரிகளை விரட்டி அடியுங்கள்’ என பேச்சு கால்நடைத்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்

* மாநில தழுவிய ஆர்பாட்டத்தில் வி.ஏ.ஓ.க்கள் வலியுறுத்தல்* பதவியில் இருந்து நீக்கவும் முதல்வருக்கு கோரிக்கைசித்தூர் : ‘கிராம வருவாய்த்துறை அதிகாரிகளை விரட்டி அடியுங்கள்’ என கால்நடை துறை அமைச்சர் அப்பல் ராஜு பேசியதை கண்டித்தும் அவர் மன்னிப்பு கேட்ககோரியும் மாநிலம் முழுவதும் வி.ஏ.ஓ.க்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.சித்தூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில், மாநில கால்நடை துறை அமைச்சரை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சித்தூர் மாவட்ட கிராம வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க தலைவர் பாலாஜி ரெட்டி தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், அமைச்சர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, மாவட்ட தலைவர் பாலாஜி ரெட்டி பேசியதாவது: நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாச நகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில். ஆந்திர மாநில கால்நடைத்துறை அமைச்சர் அப்பல் ராஜு. கிராம மற்றும் வார்டு செயலாளர் அலுவலகத்திற்கு கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தால் அவர்களை அடித்து விரட்டுங்கள் என பேசினார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆந்திர மாநில கால்நடை துறை அமைச்சராக பதவி வகிக்கும் அவர், கிராம வருவாய்த்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசியது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் மனதை மிகவும் பாதித்து உள்ளது. ஆகவே, ஆந்திர மாநில கிராம வருவாய் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் சிவராம் உத்தரவின்பேரில் ஆந்திர மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் மழை, வெயில் என பார்க்காமல் கிராமம் கிராமமாகச் சென்று நிலங்களை அளந்து பணி செய்து வருகிறார்கள். அதேபோல் ஒரு குடும்பத்தில் பாகப்பிரிவினை என்றால் கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சினை இல்லாதவாறு சுமுகமாக பாகப்பிரிவினை செய்து வருகிறார்கள். ஜாதி சான்றிதழ்,  இறப்புச் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ் என அனைத்துப் பணிகளையும் கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் மக்களுக்காகபணிபுரிந்து வருகிறார்கள். மாநில அரசு உத்தரவின்படி கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் 48 பணிகள் செய்யவேண்டும். ஆனால் மாநில அரசு 68 பணிகளை கிராம வருவாய் துறை அதிகாரிகளிடம் செய்து கொள்கிறது. இருப்பினும் கிராம வருவாய் துறை அதிகாரிகள் மாநில அரசின் உத்தரவின்படி அவர்கள் தெரிவிக்கும் அனைத்து பணிகளையும்   செய்து வருகிறோம்.இந்தநிலையில், மாநில கால்நடை துறை அமைச்சர் அப்பல் ராஜு, கிராம வருவாய்த்துறை அதிகாரிகளை விரட்டி அடியுங்கள் என கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே மாநில கால்நடை துறை அமைச்சர் அப்பல் ராஜு உடனடியாக, அனைத்து கிராம வருவாய் துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.அதேபோல் மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கால்நடை துறை அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இன்று மாநிலம் முழுவதும் 13 கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கும் மாநில கால்நடை துறை அமைச்சர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அந்தந்த மாவட்டத்திலுள்ள மண்டல வருவாய் துறை அலுவலகங்கள் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதேபோல் சித்தூர் மாவட்டம் முழுவதும் 65 மண்டலங்கள் உள்ளன இந்த 65 மண்டலங்களில் உள்ள மண்டல வருவாய் துறை அலுவலகங்கள் முன்பு அந்தந்த மண்டல கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்….

The post ‘கிராம வருவாய்த்துறை அதிகாரிகளை விரட்டி அடியுங்கள்’ என பேச்சு கால்நடைத்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Minister ,Animal ,Husbandry ,VAOs ,Chief Minister ,Village Revenue Department ,Dinakaran ,
× RELATED அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு...