×

தேர்தலுக்கு பிறகு சும்மாதான் இருப்பீங்க…நல்ல ஆசிரியரை அனுப்புறோம் தமிழ் கத்துக்கோங்க…மோடியை கலாய்த்த கனிமொழி

தென்காசியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து கனிமொழி எம்பி பேசியதாவது: ஒன்றியத்தில் நடைபெறுவது அம்பானி, அதானிகளுக்கான ஆட்சி. மீனவர்கள் பிரச்னை என்றால் மோடி பேசுவது இல்லை. விவசாயிகள் தொழிலாளர்கள் தொழில் முனைவோர் சிறுபான்மையினர் என அனைவரும் பாதிக்கக்கூடிய சட்டங்களை இயற்றிவிட்டனர். பாஜ அனைத்து சட்டங்களையும் நிறைவேற்ற எடப்பாடி ஆதரவு கொடுத்துவிட்டு இப்போது நாங்கள் வேறு, அவர்கள் வேறு என்று நாடகம் போடுகிறார்.

தேர்தல் வந்தவுடன் அடிக்கடி மோடி தமிழகம் வருகிறார். எப்படியாவது இரண்டாவது இடத்திற்கு வந்து விடலாம் என எண்ணுகிறார்கள். வாய்ப்பே இல்லை. மோடிக்கு தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆசை வேறு. தேர்தலுக்குப் பிறகு சும்மா தான் இருக்க போகிறீர்கள். நல்ல ஆசிரியராகப் பார்த்து அனுப்பி வைக்கிறோம். அண்ணாமலையை தமிழ் சொல்லித் தர சொல்ல முடியாது. ஏனெனில் அவர் கர்நாடகத்தில் இருந்தபோது தமிழர் என்று சொல்வதே அசிங்கம், கன்னடராக இருப்பதே பெருமை என்று பேசியவர். அவரை அங்கேயே வைத்திருந்திருக்கலாம். இவ்வாறு பேசினார்.

* ‘கன்னடியன்’ அண்ணாமலை கர்நாடகால போட்டியிடலாமே?
விருதுநகர் மற்றும் மதுரையில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பேசுகையில் ‘‘அண்ணாமலை என் மண், என் மக்கள் என கூறுகிறார். கர்நாடகாவில் இருந்தபோது நான் தமிழன் இல்லை, கன்னடியன். கடைசி மூச்சு இருக்கும் வரை கன்னடியன் என அழைக்க வேண்டும் என்றார்.

தற்போது கோவையில் ஏன் நிற்கிறார்? பெங்களூரு, மைசூரில் நிற்கலாமே. நாட்டை பாதுகாப்பது நாங்கள் தான் எனக்கூறும் மோடி, அருணாச்சல பிரதேசத்தில் 30 கிராமங்களை ஆக்கிரமித்து அங்கு, கட்டிடங்கள் கட்டி சீன மொழியில் பெயர் வைத்துள்ளது பற்றி, தைரியமாக கேள்வி கேட்பதில்லை. நாம் கேள்வி எழுப்பினால், தீவிரவாதிகள், தேசவிரோதிகள் என கூறுவார்கள். எதிர்க்கட்சிகளை மிரட்டியே ஆட்சியில் நீடிக்கலாம் என, நினைக்கும் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்’’ என்றார்.

The post தேர்தலுக்கு பிறகு சும்மாதான் இருப்பீங்க…நல்ல ஆசிரியரை அனுப்புறோம் தமிழ் கத்துக்கோங்க…மோடியை கலாய்த்த கனிமொழி appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Modi ,Dr. ,Rani Sreekumar ,DMK ,Tenkasi ,Ambani ,Adani ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...