×

1989ம் ஆண்டு மாநாட்டில் நான் பேசும்போது சீட்டு கேட்டு க்யூவில்நின்றவர் எடப்பாடி: நடிகர் செந்தில் ‘பங்கம்’

கோவை மாவட்டம், அன்னூர் வட்டாரத்தில் கணேசபுரம் மற்றும் கனவுக்கரையில் நீலகிரி தொகுதி பாஜ வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து பாஜ பேச்சாளர் நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கட்சியை சேர்ந்தவன். 1989ல் ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் நடைபெற்ற தேர்தல் மாநாட்டில் முதலில் பேசியவன் நான். அப்போது சீட்டு கேட்டு க்யூவில் (வரிசையில்) நின்றவர் எடப்பாடி பழனிசாமி.

ஆனால் தற்போது அவரே எம்ஜிஆராம், அவரே ஜெயலலிதாவாம். தொண்டர்கள் எல்லாம் ஒன்றும் இல்லை என்கிறார் எடப்பாடி. நான்கரை வருஷம் ஆட்சி செய்த எடப்பாடி என்ன செய்தார்?. யார் யாரோ பேச்சைக் கேட்டுக் கொண்டு, பிரிந்து நிற்கிறார் எடப்பாடி. பிரிந்து சென்றது நல்லதுதான். எவ்வளவு பேர் எங்களுடன் உள்ளார்கள் என்று தெரிந்து கொண்டோம்.

அவர் எத்தனை நாள் கட்சி நடத்துகிறார் என்று பார்ப்போம். எடப்பாடி ஒத்தை விரலில் ஓங்கி அடிப்போம் என்று டிவியில் சொல்லுகிறார். மொத்த விரல்கள் என்ன ஆச்சு சிரங்கு வந்துடுச்சா? பல மொழிகள் படித்தால் வெளியில் சென்று வேலை பார்க்கலாம். அதனால் அனைத்தையும் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு செந்தில் பேசினார்.

The post 1989ம் ஆண்டு மாநாட்டில் நான் பேசும்போது சீட்டு கேட்டு க்யூவில்நின்றவர் எடப்பாடி: நடிகர் செந்தில் ‘பங்கம்’ appeared first on Dinakaran.

Tags : Senthil ,BJP ,L. Murugan ,Nilgiris ,Ganesapuram ,Kannapkarai ,Annur district ,Coimbatore district ,MGR ,Jayalalithaa ,Jayalalitha ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...