×

ராமர் கோயில்ல போயி சத்தியம் செய்யலாமா? அண்ணாமலைக்கு சீமான் சவால்

சென்னை: மத்திய சென்னை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் நேர்மையாக நடக்குதா? என்னுடைய விவசாய சின்னத்தை எடுத்துட்டிங்க சரி விடு, முதல வரவங்களுக்கு முதல சின்னம் சொன்னா அது ஏத்துக்கிறேன். நான் தான் முதல வரல அதனால சின்னம் இல்லை சரி, ஜி.கே.வாசன், டிடிவி.தினகரன் முதல வரலயே உன்னோடு (பிஜேபி) கூட்டணி வைக்கிற அவங்களுக்கு குக்கரும், சைக்கிளும் எப்படி சரியாக வருது.

எப்படி வருது, மாம்பழம் சின்னம் அய்யா அங்கீகரிக்கப்படாத கட்சி, ஜி.கே.வாசன் அங்கீகரிக்கப்படாத கட்சி, டிடிவி.தினகரன் அங்கீகரிக்கப்படாத கட்சி, நாங்கள் ஒரு விழுக்காடு வாங்கி இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்து இருப்போம், அதுக்குள எங்கள் குரல்வளையை புடிச்சிட்ட. எப்படி அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு அந்தந்த சின்னத்தை ஒதுக்கின? விவசாய சின்னத்தில் அவங்க போட்டியிடுகிறாங்க, நீ (பாஜ) பேசாம மூடிட்டு இருக்க வேண்டியதுதானே,

எனக்கு எதிராக 40 இடத்திலும் சுயேச்சையாக போடவச்சி 40 இடத்திலும் விவசாய சின்னத்த ஏன் நிக்க வைக்கிற? சீமானுடைய விவசாய சின்னம் என்று ஓட்டு போடா வச்சி, எனக்கு விழும் ஓட்டை குறைச்சரணும் என்று நினைக்கிற, இவ்வளவு கேவலமாக இருக்க விஷம் குடிச்சி செத்து போலாம். என்னோட நேர்மையா நின்று மோதுவதற்கு ஆண்மை இல்லாதவன், வீரம் இல்லாதவன் ஏன் வர. குக்கர், சைக்கிள் இரண்டு இடத்தில் தான் நிக்கிறது மத்த இடத்துல சுயேச்சை வேட்பாளர்களுக்கே ஒதுக்க வேண்டியது தானே? இதில் இருந்து என்ன தெரிகிறது என்னைய பார்த்தால் பயம் என்று தெரிகிறது என்றார்.

தொடர்ந்து சீமான் அளித்த பேட்டி: அண்ணாமலை ஒரு காமெடி. கர்நாடகாவில் யாராவது ஒருவர் பதவிக்காக இப்படி பேசுவாங்களா… தமிழ்நாடு நோடிலா, காவேரி இஸ்யூ நோடிலா… சாகும் வரை பெருமை மிகுந்த கன்டியனா இருப்பேன் என பேசினது அவர் தான். இப்போ நாங்கள் திருப்பி தமிழ்நாடு நோடிலா, காவேரி இஸ்யூ நோடிலா, உனக்கு இங்க ஓட்டில்லா. இந்திகாரனை பாத்தா இந்தியில் பேசுற, தமிழ் மொழிக்காக செத்தவங்கள இன்னும் என்ன 80களில் இந்தி சமஸ்கிருதம் பேசிட்டு இருக்கீங்க, பிஞ்ச செருப்ப புடிச்சிட்டு இருக்கீங்க.

அது எல்லாம் உங்கள மாறி ஆளுங்க எப்போ வருவீங்க வெளுக்கலாம்னு தான். தாய் மொழி மீது பற்று இல்லாதவன் எதுக்கு அரசியலுக்கு வர நீ. இந்தி, சமஸ்கிருதத்த திணிப்ப… ஏனா அது அவன்தாய் மொழி. செத்து போன சமஸ்கிருதத்த உயர்ப்பிக்க துடிக்கிறே. 500 ஆண்டுகள் தொடாத இந்தி மொழி. ஆனா 5000 ஆண்டுக்கு மூத்த மொழி எங்கள் தாய் மொழி.

அண்ணாமலையை வர சொல்லுங்க, ராமர் பக்தர் தான நீ, ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் தான நீ, ரெண்டு பேரும் ராமர் கோயிலுக்கு போலாம். நீ தான் என்னுடைய சின்னத்தை எடுத்துகிட்ட ஆளுனு நான் சத்தியம் பண்றேன். நீ எங்கிட்ட இருந்து சின்னத்தை பறிச்சதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கும் பாஜவிற்கும் எந்த சம்மதமும் இல்லனு சொல்லு. நான் கட்சியை கலைச்சிட்டு வீட்டுக்கு போறேன். வா அயோத்திக்கு போலாம்.

* போட்டியே இல்லாதபோது பொது மேடையில் விவாதம் எதுக்கு?- அண்ணாமலை

திருப்பூர் தொகுதி பாஜ வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து ஈரோடு மாவட்டம் கோபி அருகே கவுந்தப்பாடியில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரிடம், ‘‘சீமான் உங்கள பொது விவாத மேடைக்கு வர தயாரா என கேட்டுள்ளாரே?’’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘சீமான் இப்போதுதான் அந்த லெவலுக்கு வந்திருக்கிறாரா, சீமானை யாரும் கண்டுகொள்வதில்லை.

அவர் ஒரு அட்டென்சனுக்கு வரணும். யாரையாவது பிடிச்சு வம்புக்கு இழுக்கணும். அன்பு தம்பி என்பார். அடுத்த நாள் திட்டுவார். எனக்கும், சீமானுக்கும் என்ன சம்பந்தம்? நாம் தமிழர் கட்சியுடன் போட்டியே இல்லாதபோது எதுக்கு பொது மேடையில் விவாதம்? என் மேடையில் நான் பேசுறேன். அவர் மேடையில் அவர் பேசுறார். மக்கள் முடிவு செய்வார்கள்’’ என்றார்.

* ‘செல்லூர் வாயில் நல்லவார்த்தை வந்தா மழை பெய்யும்’
‘‘முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உங்க மேல ஒரு மாதிரியான தரக்குறைவான வார்த்தையை யூஸ் பண்ணியிருக்காரே?’’ என்று கேட்டபோது, ‘‘செல்லூர் ராஜூ வாயில் நல்ல வார்த்தை வந்தால்தானே அதிசயம். கெட்ட வார்த்தை வருவது நார்மல்தான. செல்லூர் ராஜூ வாயில் இருந்து நல்ல வார்த்தை வந்தால் சொல்லுங்க. அவர் என்றைக்கு நல்லது பேசுகிறாரோ அன்றைக்கு மழை பெய்யும்.

அவர் நார்மலா பேசுவதுதானே அதற்கு ஏன் ரியாக்சன் கொடுக்கிறது? அவருடைய விரக்தி தோல்வி பயம். அந்த கட்சி மக்கள் முன்பு காணாமல் போய் கொண்டு இருக்கிறது. எல்லா மக்களும் வெளியே வர ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த விரக்தியை என்மேல காட்டுறாங்க. நான் என்ன செய்ய முடியும்?’’ என்று அண்ணாமலை பதில் அளித்தார்.

The post ராமர் கோயில்ல போயி சத்தியம் செய்யலாமா? அண்ணாமலைக்கு சீமான் சவால் appeared first on Dinakaran.

Tags : Ram temple ,Seaman ,Annamalai ,CHENNAI ,Madhya Chennai Naam Tamilar Party ,Seeman ,
× RELATED திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்