×

ஜவாஹிருல்லா எம்எல்ஏ சென்னையில் இன்று பிரசாரம்

சென்னை:திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. இதையொட்டி, அக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி அவர் இன்று காலை தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சைதாப்பேட்டை மசூதி காலனி பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.

தொடர்ந்து மாலை வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து ராயபுரம் பகுதியில், கொடுங்கையூரில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கிறார். தொடர்ந்து 6ம் தேதி கோவை, 7ம் தேதி-திருச்சி, 8ம் தேதி-ராமநாதபுரம், 9ம் தேதி- மதுரை, 10ம் தேதி-திருவள்ளூர், 12ம் தேதி-திருநெல்வேலி, 13ம் தேதி-தென்காசி, 14ம் தேதி- திண்டுக்கல், 15ம் தேதி- மத்திய சென்னை, 16ம் தேதி-சிதம்பரம், 17ம் தேதி- ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

The post ஜவாஹிருல்லா எம்எல்ஏ சென்னையில் இன்று பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,MLA ,Chennai ,Humanity People's Party ,DMK ,Jawahirullah MLA ,India Alliance ,South Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்...