திருப்புத்தூர், ஏப் 5: திருப்புத்தூர் அருகே செவ்வூர் கிராமத்தில் பிரம்ம அய்யனார் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் ஆங்காங்கே கட்டுமாடுகாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுகளைப் பிடிக்க முயன்ற 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த மஞ்சுவிரட்டை காண செவ்வூர், சத்திரக்குடி, வளையன்பள்ளம், வேலங்குடி, மலம்பட்டி, திருக்கோளக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக செவ்வூர் விஏஓ அழகுராஜா புகாரில், பூலாங்குறிச்சி எஸ்ஐ கலையரசன் செவ்வூரைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
The post திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம் appeared first on Dinakaran.