×

ஏப்.3ம் தேதி மீண்டும் புதிய உச்சம் 435.85 மில்லியன் யூனிட்டாக மின் நுகர்வு அதிகரிப்பு: மின் வாரியம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் நேற்று முன்தினம் 435.85 மில்லியன் யூனிட் மின் நுகர்வு இருந்ததாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏப்.20ம் தேதி 423.785 மில்லியன் யூனிட் மின் நுகர்வு இருந்தது. இது கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச மின் நுகர்வு. ஆனால் இந்த ஆண்டு கடந்த மார்ச் 29ம் தேதியன்றே 426.439 மில்லியன் யூனிட் மின் நுகர்வு இருந்தது.

கோடைகாலம் தொடங்கியது முதல் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்நிலையில் ஏப்.2ம் தேதி 430.13 மில்லியன் யூனிட் மின் நுகர்வு இருந்தது. தற்போது அதையும் கடந்து நேற்று முன்தினம் (ஏப்.3) 435.85 மி.யூ. மின் நுகர்வு பதிவாகி மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதிகபட்ச மின் நுகர்வு இருந்தாலும் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மின்வாரியம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், நம் மாநிலத்தின் உச்ச பட்ச மின் நுகர்வு 435.85 மில்லியன் யூனிட் ஆக ஏப்ரல் 3ம் தேதி பதிவானது (முந்தைய உச்சபட்ச நுகர்வு ஏப்.2ம் தேதி, 430.13 மில்லியன் யூனிட்). இதை மின்சார வாரியம் திறம்பட பூர்த்தி செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளது.

The post ஏப்.3ம் தேதி மீண்டும் புதிய உச்சம் 435.85 மில்லியன் யூனிட்டாக மின் நுகர்வு அதிகரிப்பு: மின் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,CHENNAI ,Tamil Nadu ,Power Board ,Dinakaran ,
× RELATED தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள...