×

வைப்பூரில் சிறப்பு பட்டா மாற்ற முகாம்துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மகளிர் பால் கூட்டுறவு சங்கம்-துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்

கலசபாக்கம் : துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மகளிர் பால் கூட்டுறவு சங்கத்தையும், வைப்பூரில் சிறப்பு பட்டா மாற்ற முகாமையும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கிவைத்தார்.துரிஞ்சாபுரம் ஒன்றியம் சீலப்பந்தல் ஊராட்சி மதுரா மோட்டூர் கிராமத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் தலைமை தாங்கினார். துணை பதிவாளர் சந்திரசேகரராஜா முன்னிலை வகித்தார். சங்க தலைவர் மஞ்சுளா வரவேற்றார். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பால் கொள்முதல் செய்து பேசுகையில், `திமுக ஆட்சியில் தான் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு பொருளாதார கடன், சுழல் நிதி கடன் வழங்கப்பட்டது. பெண்களுக்கு கடனுதவி வழங்கியதன் மூலம் தங்கள் பகுதியில் உள்ள பொருட்களை வைத்து தொழில் தொடங்கி பெண்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொண்டனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பாரதிராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் தமயந்திஏழுமலை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி.பி.ஏழுமலை, ஆவின் துணை மேலாளர் காளியப்பன், விரிவாக்க அலுவலர்கள் கலைச்செல்வி அசோக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வேட்டவலம்: வேட்டவலம் அடுத்த வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு பட்டா தொடர்பான பெயர் திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் சிறப்பு பட்டா மாற்றம் முகாம் நேற்று முன்தினம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கீழ்பென்னாத்தூர் ஒன்றியக் குழு தலைவர் அய்யாகண்ணு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அல்லி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து 77க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றார். அவற்றில் 6 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு பட்டா மாறுதல் ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீனாட்சி சம்பத், அகரம் சத்தியமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் அனுராதா சுகுமார், வட்ட துணை ஆய்வாளர் செழியன், வட்ட சார் ஆய்வாளர் முனியன், குறு வட்ட சார் அளவர் சென்னையன் மற்றும் வேட்டவலம் உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் தேவதாஸ் நன்றி கூறினார்….

The post வைப்பூரில் சிறப்பு பட்டா மாற்ற முகாம்துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மகளிர் பால் கூட்டுறவு சங்கம்-துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Women's Milk Cooperative Science ,Vice Speaker ,Vaipur ,Kalasabakkam ,Women's Milk Co ,Thurinjapuram Union ,Special Strap Change Camp ,Vaipur-Special Strap Change Camp ,-Speaker ,Ringapuram Union ,Dinakaran ,
× RELATED மின்கம்பி மீது உரசி தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லாரி