×

கோவை மாணவர்கள் 4 தங்கம், 4 வெண்கலம் வென்று அசத்தல்

கோவை, ஏப்.5: 20வது தேசிய அளவிலான சப்-ஜூனியர்களுக்கான மலை சாலை சைக்கிள் பந்தயப் போட்டி அரியானா மாநிலத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு அணி சார்பாக கோவை மாவட்ட சைக்கிளிங் வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதில் 14 வயது பிரிவு பெண்களுக்காக நடைபெற்ற டைம் ட்ரயல் மற்றும் மாஸ் ஸ்டார்ட் ஈவன்ட் போட்டியில் ஹாஷினி 2 தங்கப் பதக்கங்களும், ஸ்மித்தி 2 வெண்கலப்பதக்கமும் வென்றனர். 14 வயது ஆண்கள் பிரிவில் பிரனேஷ் 2 தங்கம் வென்றார். 16 வயது பிரிவின் பெண்களுக்கான கவுபர்னிக்கா 2 வெண்களப் பதக்கங்களை வென்றார். பதக்கங்களை வென்று கோவை திரும்பிய வீரர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

The post கோவை மாணவர்கள் 4 தங்கம், 4 வெண்கலம் வென்று அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,20th National sub-junior mountain road cycling race ,Ariana ,Tamil Nadu ,Kerala ,Andhra Pradesh ,Telangana ,Delhi ,Haryana ,Maharashtra ,Dinakaran ,
× RELATED கோவை புத்தகத் திருவிழாவில் சாழல் சொற்போர் நிகழ்வு