திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சொத்து விவரம் வருமாறு: மொத்தம் ரூ.20 கோடியே 38 லட்சத்து 61 ஆயிரத்து 862 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. 2022-2023ம் நிதியாண்டில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.1 கோடி 2 லட்சத்து 78,680 ஆகும். டெல்லியில் 2 வங்கிகளில் ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 157 முதலீடு உள்ளது. மொத்த பங்கு முதலீடு ரூ.4.33 கோடி ஆகும். மியூச்சுவல் பண்டில் ரூ.3.81 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.15.2 லட்சம் மதிப்புள்ள தங்க பத்திரம் உள்ளது. இது தவிர ரூ.4.2 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளன. தேசிய சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக சேமிப்பு மற்றும் இன்சூரன்ஸ் பாலிசிகளில் ரூ.61.52 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.9 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரத்து 264 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. ரூ.49 லட்சத்து 79 ஆயிரத்து 184 கடன் உள்ளது. கையில் 55 ஆயிரம் பணம் உள்ளது. டெல்லி குருகிராமில் 5838 சதுர அடியில் கட்டிடம் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. தங்கை பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயரில் ரூ.11 கோடியே 15 லட்த்து 2 ஆயிரத்து 598 மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் வாடகைக் கட்டிடங்கள் விடப்பட்டு உள்ளன. இருவரது பெயரிலும் நான்கரை ஏக்கர் விவசாய நிலம் மற்றும் ரூ.2.1 கோடி மதிப்புள்ள பண்ணை வீடும் உள்ளது. மொத்தம் ரூ.20.38 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.49.79 லட்சம் கடன் உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.20.38 கோடி: ரூ.49.79 லட்சம் கடன் appeared first on Dinakaran.