×

பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் இன்றைய சொத்து மதிப்பு பூஜ்யம்

புதுடெல்லி: கடந்த 2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட பைஜூஸ் நிறுவனம், ஆன்லைன் கல்வி மற்றும் பயிற்சி அளிப்பதில் சில ஆண்டுகளில் முன்னணிக்கு வந்தது. புதுமையான ஆப் மூலம் எல்.கே.ஜி முதல் எம்.பி.ஏ படிப்பு வரை பயிற்றுவிக்கும் முறைக்கு அமோக வரவேற்பு எழுந்தது. இதனால், கோடிக்கணக்கில் முதலீடும் குவிந்தது. இதன் நிறுவனர் ரவீந்திரன் கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். கடந்த 2022ல் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 1.8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. கடந்த ஆண்டு போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பெருங் கோடீஸ்வரர்கள் பட்டியலில் கூட ரூ.17,545 கோடி சொத்து மதிப்புடன் ரவீந்திரன் இடம் பெற்றிருந்தார்.

இந்தநிலையில், அதன்பிறகு பைஜூஸ் நிறுவனம் மீது ரூ. 9,362 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. அதன் பிறகு பைஜூஸ் நிறுவனத்துக்கு தொடர்ந்து இறங்குமுகம்தான். இந்த நிலையில், ரவீந்திரனுக்கு எதிராக அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால், பைஜூஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இந்த நிலையில், ரவீந்திரனின் தற்போதைய சொத்து மதிப்பு பூஜ்யம் என்று போர்ப்ஸ் இதழ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

The post பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் இன்றைய சொத்து மதிப்பு பூஜ்யம் appeared first on Dinakaran.

Tags : ByJuice ,Ravindra ,New Delhi ,LKG ,Ravindran ,Dinakaran ,
× RELATED பைஜூஸ் அதிபர் சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிவு: ஃபோர்ப்ஸ் அறிக்கை வெளியீடு