×

24 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை: படகு ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கடந்த 20ம் தேதி கடலுக்குச் சென்ற அந்தோணி ஆரோன், ராஜ், அருளானந்தம் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளையும், 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன், 2 படகுகளின் உரிமையாளர்களான அந்தோணி ஆரோன் மற்றும் ராஜ் படகின் ஓட்டுநர்களாக சென்று சிறை பிடிக்கப்பட்டதால் படகுகளை அரசுடமையாக்கியும், மற்றொரு படகின் ஓட்டுநரான ஜெகன்(46) 2வது முறை பிடிபட்டதால் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. மேலும் 24 மீனவர்கள் 18 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்து விடுதலை செய்தனர். அருளானந்தம் ஜூன் 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

The post 24 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை: படகு ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை appeared first on Dinakaran.

Tags : Rameshwaram ,RAMESWARAM ,SRI LANKAN NAVY ,ANTHONY AARON, ,RAJ ,ARULANANDAM ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை