×

அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து பிரசார வாகனத்தில் ஏறி வாக்கு சேகரிக்காமல் காருக்குள் அமர்ந்து வலம் வந்த மாஜி எம்பி

கூடுவாஞ்சேரி: அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசார வாகனத்தில் ஏறி வாக்கு சேகரிக்காமல், சுட்டெரித்த வெயிலால் காருக்குள் இருந்தபடியே வலம் வந்த முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரனால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக, அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் தனி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள அதிமுகவை சேர்ந்த ராஜசேகர் என்பவரை ஆதரித்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மண்ணிவாக்கம், வண்டலூர், நெடுங்குன்றம், ஊனைமாஞ்சேரி, வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், குமிழி, பெருமாட்டுநல்லூர், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கஜா (எ) கஜேந்திரன், தேமுதிக மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஊரப்பாக்கம் எம்.ஜி.மூர்த்தி ஆகியோர் தலைமையில், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில், நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ரவி, சாந்திபுருஷோத்தமன், ஹரிகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கன்னியப்பன், நிர்வாகிகள் ரபிக், ரங்கன், கண்ணப்பன், கார்த்திக், புஷ்பராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து பிரசார வாகனத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பிரசாரம் செய்து வந்தனர். ஆனால், நேற்று சுட்டெரித்த வெய்யிலை தாங்க முடியாமல் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் பிரசார வாகனத்தில் ஏறி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்க முடியாமல் தனது காருக்குள்ளேயே சுற்றி வலம் வந்தார். இதனால், கட்சி தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

The post அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து பிரசார வாகனத்தில் ஏறி வாக்கு சேகரிக்காமல் காருக்குள் அமர்ந்து வலம் வந்த மாஜி எம்பி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Rajasekar ,Former ,Chitlapakkam Rajendran ,Tamil Nadu, DMK ,Rajasekhar ,
× RELATED திருவேங்கடம் அருகே புகையிலை பதுக்கிய 2 வியாபாரிகள் கைது