×

என்னை வெற்றி பெற செய்தால் தென்சென்னை தொகுதியை எப்படி மாற்றி காட்டுகிறேன் என்று மட்டும் பாருங்கள் : பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சவால்

சென்னை: தென்சென்னை நாடாளுன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தொகுதி முழுவதும் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொகுதியின் வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் ஏராளமான திட்டங்களை வாக்குறுதியாக அறிவித்து வருகிறார். இந்நிலையில், பெருங்குடி குப்பை கொட்டும் இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை நேற்று பார்வையிட்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார். பின்னர், பள்ளிக்கரணை காயிதே மில்லத் நகர், கிண்டி ரயில் நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது: என்னை வெற்றி பெற செய்தால் தென்சென்னை தொகுதியை எப்படி மாற்றி காட்டுகிறேன், என்று மட்டும் பாருங்கள். ஒன்றிய அரசிடம் இருந்து கேட்டு பெற வேண்டிய திட்டங்களை அனைத்தையும் பெற்றுத் தருவேன். விநாயகபுரம் பகுதியை சுத்தமாக மாற்றிக் காட்டுவேன். எனது ஆசை என்னவென்றால், இந்த தொகுதியில் வெற்றி பெற்று இந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ, அவர்கள் உடன் இருந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பது தான். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post என்னை வெற்றி பெற செய்தால் தென்சென்னை தொகுதியை எப்படி மாற்றி காட்டுகிறேன் என்று மட்டும் பாருங்கள் : பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சவால் appeared first on Dinakaran.

Tags : Tensenne ,Bahia ,Tamil ,Nadu ,Soundararajan ,Chennai ,Bahja ,Tensennai Parliamentary Constituency ,Tensenna ,Baja ,Soundararajan Shaval ,
× RELATED ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: பாஜ நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்