×

ரூ.3 லட்சம் மதிப்பு குட்கா அழிப்பு

துரைப்பாக்கம்: அரசால் தடை செய்யப்பட்ட 130 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. அடையாறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 130 கிலோ ஹான்ஸ், பான்பராக் போன்ற குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த குட்கா பொருட்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று குட்கா பொருட்கள் மினி லாரி மூலம் பெருங்குடி குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டன. அடையாறு இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையில், தலைமை காவலர் மகாவிஷ்ணு, சதீஷ் வினோத்குமார், செல்வம், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் 20 அடி பள்ளம் தோண்டப்பட்டு அதில், குட்கா பொருட்கள் கொட்டி அழிக்கப்பட்டன.

The post ரூ.3 லட்சம் மதிப்பு குட்கா அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Gutka ,Perungudi ,Tamil Nadu government ,Adyar ,Dinakaran ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது