×

மாவட்ட தலைநகரில் அரசு பொறியியல், கலை கல்லூரி கொண்டுவர பாடுபடுவேன்: தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி வாக்குறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலுக்கு பிறகு தொடர்ந்து 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி முன்னாள் அமைச்சரும், அதிமுகமாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா தலைமையில், நேற்று கடம்பத்தூர் ஒன்றியம், ஏகாட்டூர், அதிகத்தூர், பிரையாங்குப்பம், கடம்பத்தூர், செஞ்சிபானம்பாக்கம், ராமன் கோயில், மடத்துக்குப்பம், நரசிங்கபுரம், கீழச்சேரி, மப்பேடு, தண்டலம் ஆகிய ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் கு.நல்லதம்பி பேசியதாவது: என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் தொகுதி மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன். திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் அரசு கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி கொண்டுவர பாடுபடுவேன்.

மேலும் கூவம் ஆறு தொடங்கும் பகுதியில் அருகில் உள்ள பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் விவசாய விலை நிலங்கள் பயன்பெறும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் ஓடும் ஆற்றின் நடுவே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன். கூவம் ஆறு ஓடும் வழித்தடமான கடம்பத்தூர் அடுத்த கொண்டஞ்சேரி – சத்தரை மற்றும் புதுச்சத்திரம் ஆகிய பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்படுவதால் அப்பகுதிகளில் உயர் மட்ட பாலம் அமைத்து தர பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் வேட்பாளர் கு.நல்லதம்பிக்கு ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும் மப்பேடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, கிரேன் மூலம் பிரமாண்டமான ரோஜா மாலையை வேட்பாளர் கு.நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது தேமுதிக மாவட்ட செயலாளர் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி, அதிமுக ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர், மாவட்ட அவைத் தலைவர் இ.இன்பநாதன், மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்டிஇ.சந்திரசேகர், ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கௌரி பாண்டுரங்கன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் ச.ஞானகுமார், ஒன்றிய நிர்வாகிகள் சிற்றம் ஜெ.சீனிவாசன், இரு.வே.தட்சிணாமூர்த்தி, பி.பாசூரான், பொ.பூபாலன், சரவணன், பெலிக்ஸ்பாபு கடம்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் டி.யாமினி, மூ.நரேஷ்குமார், வி.எம்.சுரேஷ், கோ.ஹரிதரன், பா.சுமதி, தேமுதிக மாவட்ட துணை செயலாளர் டி.கே.தியாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், மணவாளன், ஒன்றிய அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் பி.சி.சரவணன், விஜயகுமார், சுரேஷ்குமார், யுவராஜ் மற்றும் அதிமுக, தேமுதிக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு முரசு சின்னத்திற்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

The post மாவட்ட தலைநகரில் அரசு பொறியியல், கலை கல்லூரி கொண்டுவர பாடுபடுவேன்: தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Democratic Party ,K. Nallathambi ,Tiruvallur ,DMDK ,K. Nalladhampi ,AIADMK ,
× RELATED நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி