ஊட்டி: கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாரவியல் பூங்காவை மேம்படுத்தும் பணியில் ஒரு பகுதியாக நுழைவு வாயில் பகுதியில் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் நடைபெறும். முதன் சீசனையொட்டி ஊட்டியில் உள்ள பூங்காக்களில் மலர், காய்கறி, ரோஜா மற்றும் பழ கண்காட்சிகள் நடத்தப்படும் இதனை காண்பதற்காக பல லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக இங்கு உள்ள பூங்காக்கள் தயார் செய்யும் பணி மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவை பராமரிக்கப்பட்டு வருகிது.
விரைவில் செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்கும். மேலும் பூங்காவில் எல்லை சுவர்களில் வர்ணம் பூசி அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள மலர் மாடங்களில் வர்ணம் பூசும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. மேலும் நுழைவாயில் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்திலும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.
The post கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா மேம்பாட்டு பணி தீவிரம் appeared first on Dinakaran.