×

மிளகு எள் பாப்கார்ன்

தேவையானவை:

உலர்ந்த சோளம் – 1 கப்,
உப்பு தேவைக்கு ஏற்ப,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
வெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன்,
சில்லி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

அடிகனமான வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு உலர்ந்த சோளத்தைப் போட்டுக் கலக்கி விட்டு மூடி வைக்கவும். வேறு ஒரு வாணலியில்
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு எள்ளை வெடிக்க விடவும். எள் வெடிக்க ஆரம்பித்ததும் சில்லி பவுடர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து விடவும். அடுப்பை அனைத்து விடவும். அதற்குள் மூடி வைத்த சோளம் ெபாரிந்திருக்கும். அதனைப் போட்டு நன்றாகக் கலந்து விடவும். எள், மிளகுத்தூள், சில்லிபவுடர், உப்பு கலந்த கலவையை நன்றாக பாப்கார்ன் உடன் கலந்து விட்டால் மிளகு எள் பாப்கார்ன் தயார்.

 

The post மிளகு எள் பாப்கார்ன் appeared first on Dinakaran.

Tags :
× RELATED முட்டை சேமியா