×

நாகை மீனவர்கள் 90 பேரை சிறைபிடித்த காசிமேடு மீனவர்கள்: 9 விசைபடகு, 9 ஜிபிஎஸ் கருவி பறிமுதல்

தண்டையார்பேட்டை: காசிமேடு கடல் பகுதியில் மீன்பிடித்த நாகப்பட்டினம் மீனவர்கள் 90 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து 9 விசைபடகுகள், 9 ஜிபிஎஸ் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகப்பட்டினத்தை மீனவர்கள் 90 பேர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு 9 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது கடலில் சீற்றம் அதிகம் இருந்ததாலும் நீரோட்டம் அதிகமாக இருந்ததாலும் காசிமேடு பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த காசிமேடு மீனவர்கள், நாகப்பட்டினம் மீனவர்களை சிறை பிடித்து கரைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து 9 விசைபடகுகள், 9 ஜிபிஎஸ் கருவிகளை பறிமுதல் செய்து காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அஜய் ஆனந்திடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாகப்பட்டினம் மீனவ சங்க தலைவருக்கு தகவல் தெரிவித்து காசிமேடு வரவழைக்கப்பட்டனர்.

பின்னர், அனைவரது முன்னிலையிலும் இனி காசிமேடு பகுதியில் மீன்பிடிக்க வரமாட்டோம் என எழுதி கொடுத்தனர். அதன்பறகு பறிமுதல் செய்யப்பட்ட 9 விசைபடகு, 9 ஜிபிஎஸ் கருவிகள் நாகப்பட்டினம் மீனவர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, கடலின் சீற்றம் குறையாததால் 2 நாட்கள் இங்கு தங்கிவிட்டு செல்வதாக நாகப்பட்டினம் மீனவர்கள் கூறினர். இதற்கு காசிமேடு மீனவர்கள் ஒத்துக்கொண்டனர். இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நாகை மீனவர்கள் 90 பேரை சிறைபிடித்த காசிமேடு மீனவர்கள்: 9 விசைபடகு, 9 ஜிபிஎஸ் கருவி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kasimedu ,Thandaiyarpet ,Nagapatnam ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...