அகமதபாத் : குஜராத் மாநிலம் ராஜோட் தொகுதி பாஜக வேட்பாளரான ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவை மாற்ற வேண்டும் என்ற ராஜ்புத் சமூக மக்களின் கோரிக்கை வலுப்பதால் பாஜகவுக்கு நெருக்கடி முற்றுகிறது. ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக ரூபாலா பேசியிருந்தார். இந்த சர்ச்சை பேச்சால் குஜராத், ராஜஸ்தான், அரியானா மாநில ராஜ்புத் சமூக மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். தனது பேச்சுக்கு ரூபாலா மன்னிப்பு கேட்டும், அதனை மறுத்துள்ள ராஜ்புத் சமூக மக்கள், ராஜ்கோட் தொகுதிக்கு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
The post குஜராத்திலும் பாஜகவிற்கு நெருக்கடி .. ஒன்றிய அமைச்சருக்கு வலுக்கும் எதிர்ப்பு appeared first on Dinakaran.