டெல்லி: நஷ்டத்தில் இயங்கியபோதும் 33 நிறுவனங்கள் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.600 கோடி நிதி வழங்கி அதன் மூலம் வரிஏய்ப்பு உள்ளிட்ட ஏராளமான பலன்களை பெற்று மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. தேர்தல் பாத்திரங்கள் நடைமுறையை பற்றிய பல கேள்விகள் எழுந்தும் அதை பிடிவாதமாக நடைமுறை படுத்திய மத்திய பாஜக அரசு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை பல்வேறு தனியார் நிறுவனமிடம் இருந்து பெற்றது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில் மேலும் 33 நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ரூ.582 கோடி நன்கொடை வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதில் பாஜகவுக்கு மட்டும் ரூ.434 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதும் வெளிவந்துள்ளது. கடந்த 2016 முதல் 2023ம் வரையிலான கடந்த 7 நிதியாண்டுகளில் இந்த 33 நிறுவனங்களின் நஷ்டம் மட்டும் ரூ.1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ள நிலையில் அவை எப்படி நிதி வழங்கின என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கள் நஷ்டக்கணக்கை காட்டி வரி ஏதும் செலுத்தாமல் அவை பலனடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவை மட்டும் இன்றி மேலும் 6 நிறுவனங்கள் வழங்கிய ரூ.646 கோடி ரூபாய் தேர்தல் நிதியில் ரூ.601 கோடி பாஜகவுக்கு சென்றுள்ளது. அந்த நிறுவனங்களின் நிகர லாபத்தைவிட அவை வழங்கிய நிதி அதிகமாக உள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதன் மூலம் லாப, நஷ்டத்தை குறைத்து காட்டி பலடைந்திருக்கலாம் என தெரிகிறது. இதே காலகட்டத்தில் மேலும் 6 நிறுவனங்கள் பாஜகவுக்கு 45 கோடி வழங்கியுள்ளன. இவை பணபரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களில் துணை நிறுவனங்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
The post தேர்தல் பத்திரங்கள்: நஷ்டத்தில் இயங்கும் 33 நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு ரூ.434 கோடி ரூபாய் நிதி appeared first on Dinakaran.