×

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை: மோடி படம் பொறித்த 40,000 பனியன்கள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கொடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளும் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பாஜக தேமுதிக சின்னம் பொறிக்கப்பட்ட பனியன்கள், சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்பதூர் சுங்கன்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வ்கான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பதிலிருந்து வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது கிலோ கணக்கில் நகைகள் இருந்தது தெரியவந்தது.

அனால் அவற்றிற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 கொடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டே கால் கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த அசையாமணிவிளக்கு பகுதியில் கர்நாடகா பதிவெண் கொண்ட இரண்டு கண்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அதில் பிரதமர் மோடி படம் பொறிக்கப்பட்ட 40,000 பனியன்களும், தாமரை சின்னம் பொறித்த 1800சேலைகளும் இருப்பது தெரியவந்தது.

அதற்கான ஆவணங்கள் இல்லாததால் 2 கண்டெய்னர் லாரிகளோடு பனியன்கள் சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தேமுதிக நிர்வாகி கணபதி என்பவரின் காரில் கொண்டுவரப்பட்ட முரசு சின்னம் அச்சிடப்பட்ட 75 பனியன்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.54 லட்சம், ஓசூர் அருகே பேரிகை பகுதியில் கரை நிறுத்தி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயும் சீர்காழி அடுத்த திருவெண்காடு பகுதியில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் சிக்கியது.

ஈரோடு வெண்டியம் பாளையத்தில் வாகன தணிகையின் போது சுமார் 7 ஆயிரம் கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகளையும் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனிடையே பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சேனை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரூ.50 ஆயிரம் மேல் பணத்தை எடுத்து செல்ல பனியன்கள் அனுமதி கோரிய கடிதம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் இதுவரை அங்கிருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும் தெரிவித்தார். பதற்றமான அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணைராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்த படுவார்கள் என்ற சாகு தமிழ்நாட்டில் பண பட்டுவாடாவை தடுக்க அணைத்து கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கையம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

The post தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை: மோடி படம் பொறித்த 40,000 பனியன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Banyans ,Modi ,Tiruvallur ,BJP ,Virudhunagar ,Madurai ,Perumpadur ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து