×

ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றும் திட்டம்: ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றுவது தொடர்பான திட்டம் குறித்து ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மாசுவை அகற்றுவது தொடர்பான திட்டத்தை வகுக்கும் பணியை தனியாருக்கு வழங்குவது ஏன்? என்று வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் கழிவுகள் தேங்கி நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆலையை இடிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சமூக ஆர்வலர் பாத்திமா தொடர்ந்த வழக்கை ஏப்.24-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

The post ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றும் திட்டம்: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,ICourt ,Tamil Nadu Pollution Control Board ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு...