×

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது!

சென்னை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதி போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இந்த ஆண்டு சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 5ம் தேதி இத்தொடரில் 28 லீக் போட்டிகள், பிளே ஆஃப் சுற்றில் 2 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த தொடர் நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம், சென்னை ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது. ஜூலை 5 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் லீக் போட்டிகள் நெல்லை, நத்தம், சேலம், கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன. பிளே ஆஃப் சுற்றின் போட்டிகள் தகுதி சுற்று 1, எலிமினேட்டர்) 30, 31 ஆகிய தேதிகளில் நத்தத்தில் நடைபெறுகிறது.

தகுதி சுற்று 2 மற்றும் இறுதிப் போட்டி சென்னையில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4- ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜூலை 5ம் தேதி சேலத்தில் நடைபெறும் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் மோதுகின்றன.

The post டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது! appeared first on Dinakaran.

Tags : TNPL T20 cricket series ,Chennai ,TNPL T20 cricket ,Tamil Nadu Cricket ,Dinakaran ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...