×

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு அபராதம் விதிப்பு

விசாகப்பட்டினம்: நேற்று (ஏப்ரல் 3) விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ.24 லட்சமும் மற்றும் இம்பாக்ட் ப்ளேயர் உட்பட அணியில் விளையாடும் 11 பேருக்கும் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒய்எஸ்ஆர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த கேகேஆர் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்தது. சால்ட் 18, நரைன் 85 ரன் (39 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்), ரகுவன்ஷி 54 ரன் (27 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஷ்ரேயாஸ் 18, ரிங்கு 26 ரன் (8 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ரஸ்ஸல் 41 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.

அடுத்து மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தாவின் பந்து வீச்சை தக்குப்பிடிக்க முடியாமல் 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 166 ரன்னில் சுருண்டது. இதனால், கொல்கத்தா அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அரை சதம் விளாசிய கேப்டன் ரிஷப் பந்த் 55 ரன்(25 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக டிரிஸ்டன் ஸ்டப்பஸ் 54 ரன்(32 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். கொல்கத்தா பந்துவீச்சில் வைபவ் ஆரவ், வருண் சக்ரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ.24 லட்சமும் மற்றும் இம்பாக்ட் ப்ளேயர் உட்பட அணியில் விளையாடும் 11 பேருக்கும் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பண்ட்க்கு அபராதம் விதிப்பது இது 2வது முறையாகும். இதற்கு முன் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 6 புள்ளிகள் மற்றும் +2.51 ரன்ரேட் உடன் புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.

The post கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Rishabh Pant ,Kolkata ,Visakhapatnam ,IPL ,Kolkata Knight Riders ,YS ,Rajasekhara ,Reddy ,VDCA ,Kolkata Delhi ,Dinakaran ,
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...