×

மக்களவை தேர்தல்: கர்நாடக பாஜக-வில் வலுக்கும் உட்கட்சிப் பூசல்

பெங்களூரு: மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா அதிருப்தி அடைந்துள்ளார். ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்ற ஈஸ்வரப்பாவை சந்திக்க அமித் ஷா மறுப்பு தெரிவித்தார். எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவதில் ஈஸ்வரப்பா உறுதியாக உள்ளார். ஷிமோகா தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மகனுக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்த ஈஸ்வரப்பா போட்டி வேட்பாளராக நிற்கிறார். கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரான ஈஸ்வரப்பா போட்டி வேட்பாளராக நிற்பதால் எடியூரப்பா மகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷிமோகா, சித்ரதுர்கா, பெங்களூரு வடக்கு, சிக்கமங்களூரு, மைசூரு, தாவணகரே தொகுதிகளில் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தல்: கர்நாடக பாஜக-வில் வலுக்கும் உட்கட்சிப் பூசல் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,Karnataka BJP ,BENGALURU ,Eshwarappa ,Amit Shah ,Delhi ,Shimoga ,Yeddyurappa ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு