×

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் சென்னை வந்தனர்!

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் சென்னை வந்தனர். ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். வழக்கம் போல் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.

இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளார். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு மீனவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் பெயர் மற்றும் கூடுதல் விவரங்கள் இலங்கை கடற்படை விசாரணைக்கு பின்னரே தெரியவந்துள்ளது. மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்திய – இலங்கை தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் மீனவர்களை அதிகாரிகள் வரவேற்று, அரசு வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

 

The post இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் சென்னை வந்தனர்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lanka ,prison ,Chennai ,Rameshwaram ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...