சென்னை: மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவில் பூத் சிலிப்பை அங்கீகார அடையாள அட்டையாக கருத முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.
இதனையொட்டி வாக்காளர்களின் பெயர், வாக்குச்சாவடி விவரம் அடங்கிய பூத் சிலிப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வருகின்றன. இந்நிலையில் பூத் சிலிப்பை வாக்கு செலுத்துவதற்கான அங்கீகார அடையாள அட்டையாக கருத முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களில் பூத் சிலிப் வைத்து பலர் வாக்கு செலுத்தி வந்தனர். ஆனால், வரும் மக்களவை தேர்தலில் பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் எனவும் வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்துப் பிழைகள் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
The post மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவில் பூத் சிலிப்பை அங்கீகார அடையாள அட்டையாக கருத முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.