×

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை:தேர்வு நடைபெறும் 4 பள்ளிகளுக்கு பாதுகாப்பு

மயிலாடுதுறை: சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். வலைகளை எடுத்து கொண்டு செம்மங்குளம் பகுதியில் தெரு தெருவாக வனத்துறையினர் தேடினர். வனத்துறையினருடன் இணைந்து தீயணைப்புத்துறை அலுவலர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று இன்று காலை முதல் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை திருச்சம்பள்ளியில் வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 10 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சிறுத்தையை பார்த்தால் 9994884357 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் 4 பள்ளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மற்றும் வனத்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை:தேர்வு நடைபெறும் 4 பள்ளிகளுக்கு பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladudur ,MAYILADUDHARA ,Mayiladudura ,Semmangkulam ,Mayiladu ,
× RELATED மயிலாடுதுறை மக்கள் இனி சிறுத்தை...