×

மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சியில் வாக்கு சேகரிக்க கூட்டம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அதிமுக வேட்பாளர்: கட்சியினர் மீது கடும் அதிர்ச்சி

மதுராந்தகம், ஏப்.4: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர், மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சியில் வாக்கு சேகரிக்க காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க சென்றார். அங்கு பொதுமக்கள் இல்லாததால் கட்சியினர் மீது கடும் அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சியில் நேற்று காலை பிரசாரத்தை தொடங்கினார்.

இதனையடுத்து கினார், ஊராட்சியில் பிரசாரம் செய்துவிட்டு முன்னுத்திக்குப்பம் ஊராட்சியில் வாக்கு சேகரிக்க சென்றபோது, அங்கு மக்கள் கூட்டத்தை கூட்டாமல் மிகப்பெரிய சரவெடியை சாலையில் போட்டு வேட்பாளர் வந்து நின்றவுடன் அதிமுகவினர் பட்டாசை கொளுத்தி விட வேட்பாளர் ராஜசேகர், எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆகியோர் அலறி முகத்தை மூடினர். அங்கு கூடியிருந்த மக்களும் அதிர்ச்சி அடைந்து காதுகளை மூடிக்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து அங்கிருந்த உள்ளூர் நிர்வாகியை, அதிமுக நிர்வாகி உங்கள் ஊர் கிராம மக்கள் எங்கே என சத்தம் போட்டார்.

இதனையடுத்து, அங்கிருந்து வேட்பாளர் வாகனம் கிளம்பி சென்றபோது பெண் ஒருவர் இந்த பகுதிக்கு பேருந்து விடுங்கள் என்று கேட்டதற்கு, வாகனத்தை நிறுத்தாதே உடனடியாக செல் என்று மாவட்ட நிர்வாகி கூறியதை அடுத்து அந்த வாகனம் விரைந்து சென்றது. மேலும், வேனில் இருந்தபடி பிரசாரம் செய்த அதிமுகவினர், சாலையில் செல்பவர்களை மரியாதை குறைவாக சிவப்பு சட்ட, மஞ்ச சட்ட, இரட்டை இலைக்கு ஓட்டு போடு, டூவீலரில் போறவரே இரட்டை இலைக்கு ஓட்டு போடு என அநாகரிகமாக பேசிக்கொண்டு சென்றனர். பெண் ஒருவரை பார்த்து இரட்டை இலைக்கு ஓட்டு போடுமா அங்க போயி ஓட்ட மாத்திடப் போற என கூறிவிட்டு சென்றனர்.

மேலும் சாலையில் சென்ற இளம் பெண்கள் வாக்காளர் வருவதை கண்டு துணியால் முகத்தை மூடிக்கொண்டு சென்ற சம்பவங்களும் நடந்தேறியது. இந்தப் பிரசாரத்துக்கு என அண்டவாக்கம் கிராமத்தில் இருந்து 50 பெண்களை ஒரே மினி லாரியில் ஏற்றிக்கொண்டு பிரசாரம் நடக்கும் இடங்களில் எல்லாம் அழைத்துச் சென்று நிற்க வைத்து கூட்டத்தை அதிகப்படுத்தி காட்டினர். அதில், ஒரு பெண் எங்க பேருலாம் கணக்கெடுத்துக்கோங்க என சத்தம் போட, நீயே லிஸ்ட் எழுது மா என பேப்பரை அதிமுகவினர் வழங்கினர். இதனை அடுத்து அந்தப் பெண் அனைவரையும் கணக்கீடு செய்து நீண்ட பெயர் லிஸ்ட்டை எழுதிக் கொடுத்தார்.

இதனையடுத்து புதுப்பட்டு கிராமத்திற்கு பிரசாரத்திற்கு வேட்பாளரின் வாகனம் செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் அதிமுக கொடியை கட்டிக்கொண்டு பிரசார வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள் சாலையோரம் நின்ற முதியவரை மோதி கீழே தள்ளிவிட்டு காயத்தை ஏற்படுத்தினர். அவரிடம் சாரி மட்டும் கூறிவிட்டு சாலையிலேயே காயமடைந்த வரை விட்டு சென்றது அப்பகுதி மக்களை வேதனை அடைய செய்தது. ஒரு கட்டத்தில் அந்த முதியவரே மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று சென்று விட்டார்.

இதுபோன்று பல்வேறு கூச்சல் குழப்பங்களுடன் அதிமுக வேட்பாளர் ராஜசேகரின் பிரசாரம் நடைபெற்றது. இந்த சம்பவங்களால் கவலை அடைந்த வேட்பாளர் ராஜசேகர், உத்திரமேரூரில் தேமுதிக கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருவதாக கூறி பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்றுவிட்டார். வேனில் இருந்தபடி பிரசாரம் செய்த அதிமுகவினர், சாலையில் செல்பவர்களை மரியாதை குறைவாக சிவப்பு சட்ட, மஞ்ச சட்ட, இரட்டை இலைக்கு ஓட்டு போடு, டூவீலரில் போறவரே இரட்டை இலைக்கு ஓட்டு போடு என அநாகரிகமாக பேசிக்கொண்டு சென்றனர். பெண் ஒருவரை பார்த்து இரட்டை இலைக்கு ஓட்டு போடுமா அங்க போயி ஓட்ட மாத்திடப் போற என கூறிவிட்டு சென்றனர்.

The post மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சியில் வாக்கு சேகரிக்க கூட்டம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அதிமுக வேட்பாளர்: கட்சியினர் மீது கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Butur Panchayat ,Madhuranthakam Union ,Madhuranthakam ,Kanchipuram ,Rajasekhar ,Butur ,panchayat ,Madhuranthakam Union Buthur Panchayat ,Dinakaran ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...