×

ஆருத்ரா கோல்ட் ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் கிளை இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில் ரூ.2,438 கோடி மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவரான திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜ் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், இந்த மோசடிக்கும், தனக்கும் தொடர்பு இல்லை. தன்னிடம் இருந்த சேமிப்புத் தொகையை ஆருத்ராவில் முதலீடு செய்திருந்ததாகவும், அதை மீட்டு தரக்கோரி ஆருத்ராவுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, ஆருத்ரா நிறுவனத்தில் முதலில் முதலீட்டாளராக இருந்த சூசைராஜ் பின்னர் அந்த நிறுவனத்தின் திருச்சி கிளை இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் பொதுமக்களிடம் 10 கோடி ரூபாய் வரை முதலீடுகளை வசூலித்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புகள் உள்ளது. விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். காவல் துறை தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதி, சூசைராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post ஆருத்ரா கோல்ட் ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் கிளை இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Susairaj ,Trichy ,Arudra ,Arudra Gold ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...