×

பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருச்சுழி, ஏப்.4: திருச்சுழி அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது. திருச்சுழி அருகே உள்ள பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் சுப்பையா மகன் கார்த்திக் ராஜா (30). இவருக்கு 3 வருடத்திற்கு முன்பு கார்த்திகை செல்வி என்பவருடன் திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் கார்த்திகை செல்வி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். மனைவியை பிரிந்த சோகத்தில் கார்த்திக் ராஜா பிள்ளையார் நத்தம் பகுதியிலுள்ள தனது வீட்டில் வசிக்காமல் ஊருக்குள் சென்று தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது வீட்டிற்கு சென்றார். அப்போது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் இருந்த பீரோ அடையாளம் தெரியாத மர்மநபர்களால் உடைக்கப்பட்டு 2 பவுன் தங்கச்செயின், 1 பவுன் தங்க மோதிரம் உள்பட சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருச்சுழி போலீசார் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Subbiah ,Karthik Raja ,Pillayarnatha ,Karthikai ,
× RELATED நரிக்குடி அருகே வாலிபர் தற்கொலை