×

மாவட்டத்தில் 248 வாக்குசாவடிகளில் 1200 வாக்காளர்கள்

ஈரோடு, ஏப். 4: மாவட்டத்தில் மொத்தமுள்ள 2222 வாக்குசாவடிகளில் 248 வாக்குசாவடிகளில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, அந்தியூர், பெருந்துறை, பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி ஆகியவை ஈரோடு நாடாளுமன்ற தொகுதியிலும், பவானி, அந்தியூர், கோபி, பெருந்துறை ஆகியவை திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியிலும், பவானிசாகர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியிலும் அமைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 2222 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. வாக்குபதிவு நாளில் இந்த வாக்குசாவடி மையங்களில் ரிசர்வ் பணி உள்பட மொத்தம் 10417 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இதனிடையே மொத்தமுள்ள 2222 வாக்குசாவடிகளில் 248 வாக்குசாவடிகள் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளாகும். கூடுதல் வாக்குசாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட உள்ளதோடு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மாவட்டத்தில் 248 வாக்குசாவடிகளில் 1200 வாக்காளர்கள் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,East ,Erode West ,Modakurichi ,Bhavani ,Gopi ,Anthiyur ,Perundurai ,Bhavanisagar ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...