×

வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு

பவானி, ஏப். 4: பவானி வட்டத்திற்கு உட்பட்ட கிராமப்பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பவானி தாசில்தார் தியாகராஜ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், செந்தில், ஆனந்தகுமார் ஆகியோர் ஜம்பை மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளை சேர்ந்த மரக்கன்றுகளை வாக்காளர்களுக்கு வழங்கினர். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் 100 சதவீத வாக்கினை பதிவு செய்து, ஜனநாயக கடமையாற்ற வேண்டும். தேர்தலில் வாக்களிப்பது வாக்காளர்களின் உரிமை என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பொதுமக்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Bhawani ,Bhawani Tahsildar Thyagaraj ,Revenue Inspector ,Matheswari ,Village Administrative Officers ,Kumar ,
× RELATED பவானி மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி