நிலக்கோட்டை, ஏப். 4: நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த பங்குனி திருவிழா ஆண்டு கடந்த மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. மேலும் தினந்ேதாறும் அம்மன் குதிரை, பூச்சப்பரம், கேடயம், ஷேசம், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் 8வது நாளான நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் பாலசரவணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
The post அம்மையாநாயக்கனூரில் பங்குனி திருவிழா பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.