×

நாடாளுமன்ற வேட்பாளருடன் தேர்தல் பணியாற்றியபாமக ஒன்றிய செயலாளர் திடீர் ராஜினாமா வந்தவாசியில் உட்கட்சி பூசல்

வந்தவாசி, ஏப்.4: வந்தவாசியில் உட்கட்சி பூசல் காரணமாக நாடாளுமன்ற வேட்பாளருடன் தேர்தல் பணியாற்றும் பாமக ஒன்றிய செயலாளர் செல்வம் திடீர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(45). வந்தவாசி மேற்கு ஒன்றிய பாமக செயலாளராக 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில தலைமைக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆரணி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளரான கணேஷ்குமாருக்கு நெருக்கமாக இருக்கும் தெள்ளார் ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் சக்திவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர், வேட்பாளர் கணேஷ்குமாரிடம் தன்னை பற்றி தவறுதலான கருத்துக்களை கூறியுள்ளனர்.

இதனால் தேர்தல் பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், புகார்கள் மீதும் விசாரணை செய்யாமல் இருவரும் கூறிய கருத்துக்களை வேட்பாளர் ஆமோதிப்பதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே, ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், தொண்டனாக கட்சியில் தொடர்வதாகவும் கூறியுள்ளார். தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பாமக வேட்பாளருடன் தேர்தல் பணியாற்றி வந்த ஒன்றிய செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.

The post நாடாளுமன்ற வேட்பாளருடன் தேர்தல் பணியாற்றியபாமக ஒன்றிய செயலாளர் திடீர் ராஜினாமா வந்தவாசியில் உட்கட்சி பூசல் appeared first on Dinakaran.

Tags : Party union ,Vandavasi ,BMC Union ,Selvam ,Chennavaram village ,Thiruvannamalai ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை