×

வையம்பட்டி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்-10 மலை கிராம மக்கள் அவதி

மணப்பாறை : வையம்பட்டி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற ரயில்வே துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் 10 மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கீரனூர் ரயில்வே சுரங்க பாதையில் மேற்கூரை அமைத்த பின்னரும் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். சுக்காவழி, மீனாட்சியூர், புதுவாடி, குமரன்பட்டி, கட்டக்காம்பட்டி உள்பட 10 மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கீரனூரில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாகத்தான் மெயின் ரோட்டுக்கு வந்து செல்ல வேண்டும். இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் தங்களது காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல 5 கி.மீ சுற்றி அய்யலூர் செல்கின்றனர். இங்கு புதிய ரயில்பாதை அமைத்தபோது மேற்கூரையுடன் சப்வே அமைக்கப்பட்டும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழையினால் பக்கவாட்டு சுவர்கள் வழியே மழைநீர் கசிந்து சுரங்கப் பாதைகளில் பெருமளவு நீர் தேங்கி நிற்கிறது. இங்கு மேற்கூரை அமைக்கப்பட்டதால் நீரை வெளியேற்றும் மின்மோட்டார் அமைப்பு நிறுவப்படவில்லை. இதனால், இவ்வழியே வாகனங்கள் செல்லும்போது நீரினால் இன்ஜின் இயக்கம் நின்று விடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அத்துடன் புது வாடியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சுரங்கப்பாதையை கடக்க கடும் அச்சத்துடனேயே செல்லும் நிலைமை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், ரயில்வே துறையினரும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த 10 மலை கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வையம்பட்டி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்-10 மலை கிராம மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : avadi ,Wayambatti ,MANPARA ,Railway Department and ,District Administration ,Waiyambatti ,Waiyambati ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் லாரி எரிந்து நாசம்