×

மழைநீர் தேங்குவதை தடுக்க கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்

ஊட்டி : ஊட்டி ஆர்டிஓ அலுவலகம் முதல் சேரிங்கிராஸ் வரை சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் பொருட்டு கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அதிக கனமழை பெய்யும் போது தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதுடன் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும். இதனால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அவதியடைகின்றனர். குறிப்பாக, ஊட்டி – குன்னூர் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) முதல் சேரிங்கிராஸ் வரை போதிய கால்வாய் வசதிகள் இல்லாததாலும், இருக்க கூடிய கால்வாய்களில் மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமித்துள்ளதாலும் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம்.இதனால், முக்கிய சாலையாக விளங்கும் இச்சாலையில் பயணிப்போர் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால், இ்்ப்பகுதியில் கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த சூழலில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது கால்வாய் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.இதற்காக ஆர்டிஓ அலுவலகம் முதல் சேரிங்கிராஸ் வரை பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கால்வாய் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும் பட்சத்தில் இனிவரும் நாட்களில் மழைநீர் தேங்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post மழைநீர் தேங்குவதை தடுக்க கால்வாய் அமைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty RTO ,Charingcross ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...