×

தேர்தல் விதிமுறைகளை மீறி குழந்தைகளை வைத்து நிதின்கட்கரி பிரசாரம்: தேர்தல் ஆணையத்தில் காங். புகார்

மும்பை: ஒன்றிய சாலை, கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி இந்த மக்களவை தேர்தலிலும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அப்போது குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பா.ஜ பிரசார பேரணி வீடியோவும் இணையதளத்தில் வைரலானது. இந்தநிலையில் நிதின்கட்கரி மற்றும் பா.ஜ மீது காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘ கட்கரி மற்றும் அவரது கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தி உள்ளனர். நாக்பூரில் உள்ள வைஷாலி நகரில் ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்ற கட்சியின் பிரச்சாரப் பேரணிக்கு உள்ளூர் பள்ளி குழந்தைகளை பாஜ மற்றும் கட்கரி பயன்படுத்தினர். எனவே கடுமையான நடத்தை விதிகளை மீறியதற்காக நிதின் கட்கரி மற்றும் பாஜ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் விதிமுறைகளை மீறி குழந்தைகளை வைத்து நிதின்கட்கரி பிரசாரம்: தேர்தல் ஆணையத்தில் காங். புகார் appeared first on Dinakaran.

Tags : Nitin Gadkari ,Congress on Election Commission ,Mumbai ,Union Road ,Minister ,Nagpur ,Maharashtra ,Lok Sabha ,BJP ,Congress in Election Commission ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...