×

பிரபல குத்துசண்டை வீரர் விஜேந்தர் பாஜவில் சேர்ந்தார்

புதுடெல்லி: கடந்த 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் குத்துசண்டை போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்தவர் விஜேந்தர் சிங். விளையாட்டுதுறையில் அவருடைய சாதனைகளை பாராட்டும் விதமாக பத்மஸ்ரீ, அர்ஜூனா உள்ளிட்ட விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அரியானாவின் ஜாட் வகுப்பை சேர்ந்த விஜேந்தர் கடந்த 2019ல் காங்கிரசில் சேர்ந்த அவர் தெற்கு டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

உபி, மதுரா தொகுதியில் ஜாட் பிரிவினர் அதிகமாக உள்ளதால் பாஜ வேட்பாளரான ஹேமமாலினியை எதிர்த்து போட்டியிட அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் வந்தன. இந்நிலையில் நேற்று பாஜ தலைமை அலுவலகத்திற்கு சென்ற விஜேந்தர் சிங் பாஜ பொது செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தார்.

The post பிரபல குத்துசண்டை வீரர் விஜேந்தர் பாஜவில் சேர்ந்தார் appeared first on Dinakaran.

Tags : Vijender ,Bajaj ,New Delhi ,Vijender Singh ,Beijing Olympics ,Padma Shri ,Arjuna ,Ariana ,Vijender Bajaj ,
× RELATED புலம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டில்...