×

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் ஆடைகளை கழற்றச் சொன்ன மாஜிஸ்திரேட் மீது வழக்கு பதிவு

ஜெய்ப்பூர்: பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக மாஜிஸ்திரட் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம்,கரோலி மாவட்டம், ஹிண்டோன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் இளம் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மார்ச் 27ம் தேதி அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக கடந்த 30ம் தேதி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு அந்த பெண் ஆஜரானார்.

அப்போது,விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் அந்த பெண்ணிடம் ஆடைகளை கழற்றி காயங்களை காட்டுமாறு கூறியதாக தெரிகிறது. காயங்களை காட்ட மறுத்த அவர் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர்,காவல் துறை (எஸ்டி,எஸ்சி பிரிவு)டிஎஸ்பி மீனாவிடம் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டுக்கு எதிராக பெண்ணை முறையின்றி அடைத்து வைத்ததற்காகவும், வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது.

The post பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் ஆடைகளை கழற்றச் சொன்ன மாஜிஸ்திரேட் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Jaipur ,Hindon Police Station, Karoli District, Rajasthan ,Dinakaran ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...